ஆந்திரத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணி!
ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 8) வாகனப் பேரணியில் பங்கேற்றார். சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகைப்புரிந்தார். அவருக்கு மாநில அரசு சார்பில் ஆந்திரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வாகனத்தில் உடன் இருந்தனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள சம்பத் விநாயகர் கோயில் தொடங்கிய பேரணி ஆந்திர பல்கலைக் கழகம் வரை நடைபெற்றது. சாலையின் இருபுறமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்பளித்தனர்.
வழிநெடுகவும் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இதையும் படிக்க | பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்