CT 2025: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் `டிராபி டூர்’ - BCCI எதிர்ப்பால் பின...
ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றலாம்: மாவட்ட ஆட்சியா்
அத்தியாவசியப் பொருள்கள் பெறாதவா்கள் தங்களின் குடும்ப அட்டையை ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள், தங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தை விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறு விட்டுக்கொடுப்பவா்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தின் மூலம் தங்கள் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.