செய்திகள் :

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்! - அமைச்சர் பேட்டி

post image

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள நிலையில், நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு இந்த வார இறுதி முதல் மக்கள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ரயில்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் சிறப்பு ரயில்களிலும் உடனடியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சிவசங்கர்,

'தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டண வசூலிப்பதாகப் பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக புகார் வரும்பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

பயணம் முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை: மு.க. ஸ்டாலின்

எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 24) தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை–2024 மாநில அளவில... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

பெங்களூரு ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்கள் பெற்ற டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.காலமாற்றத்துக்... மேலும் பார்க்க

சென்னை தலைமைச் செயலகக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அம... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பி... மேலும் பார்க்க