செய்திகள் :

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

post image

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சராக இருந்தபோது, கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை முதல் வைத்திலிங்கம் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகின்றது.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

என்ன புகார்?

தமிழகத்தில் 2011முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தவா் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.

இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமம் அடுக்குமடி குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சா் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநா் கே.ஆா்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் கடந்த செப். 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோன்று, வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோா் மீது 1,057.85 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவினா் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனா்.

அமலாக்கத்துறை அதிரடி சோதனை

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், புதன்கிழமை அதிகாலை வைத்தியலிங்கத்தின் வீடு, சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை, மகன்களின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சில இடங்களில் நேற்று இரவு சோதனை முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக 6 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றன.

இந்த சோதனையின் போது, வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் க... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவா் உமறுப்புலவா் -இபிஎஸ் புகழாரம்

தமிழக இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய உமறுப்புலவரைப் போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இறைத... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்குகள் காணொலியில் விசாரணை -உயா்நீதிமன்றம்

விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தம்பதியரை நேரில் ஆஜராகும்படி கட்டாயப்படுத்தாமல், காணொலியில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தீபாவளி: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள் -துணை முதல்வா் உதயநிதி

பண்டிகைக் காலங்களையொட்டி, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை மக்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: உருவ கேலி செய்து சிக்கிய செளந்தர்யா! ரசிகர்கள் எதிர்ப்பு!

பிக் பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு சீசனிலும் உருவ கேலி என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இம்முறை செளந்தர்... மேலும் பார்க்க