செய்திகள் :

கோவையில் நடுரோட்டில் பற்றியெரிந்த பேருந்து: பயணிகள் அதிர்ச்சி

post image

கோவையில் ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இறங்கியதால் நல்லவாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

கோவையிலிருந்து வியாழக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கிச் சென்றது.

பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

பயணிகளை பேருந்திலிருந்து இறங்கினர். பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது.

இதையும் படிக்க |முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பேருந்தில் இந்து பயணிகள் வேகமாக இறங்கியதால் நல்லவாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (அக்.24) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ம... மேலும் பார்க்க

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச... மேலும் பார்க்க

மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களி... மேலும் பார்க்க