செய்திகள் :

டானா புயல் எங்கே கரையை கடக்கும்? வானிலை மையம் தகவல்

post image

வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் கரையை கடக்கும் இடம் குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

எங்கே கடக்கும்?

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிஸாவின் பாரதிப்புக்கு 210 கி.மி. தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 310 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த தீவிர புயல், இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் புரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே ஒடிஸாவின் பிதர்கனிகா மற்றும் தம்ராவுக்கு அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீவிர புயலானது கரையை கடக்கும்போது 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

முன்னெச்சரிக்கை தீவிரம்

டானா புயலை தொடர்ந்து, ஒடிஸா மற்றும் மேற்கு வங்க அரசுடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிஸாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.

புயலைக் கருத்தில் கொண்டு ஒடிஸா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

மரம் வெட்டும் கருவிகள், படகுகள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீட்புக் குழுக்கள் தயாா்நிலையில் உள்ளனா்.

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்... மேலும் பார்க்க

அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும்... மேலும் பார்க்க

பொதுக் கணக்கு குழு முன் ஆஜராகாத செபி தலைவர்! ஏன்?

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு அமர்வின் முன், செபி தலைவர் மாதவி புச் இன்று ஆஜராக இயலவில்லை எனத் தெரிவித்ததால், கூட்டத்தை ஒத்திவைத்ததாக அக்குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தார்.செபி... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் முதல் தேர்தல்: ராபர்ட் வதேரா என்ன சொல்கிறார்?

பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் ப... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் சித்தராமையா நேரில் ஆய்வு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் சி... மேலும் பார்க்க

உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அதன்பிறகு ராகுலுடன் பிரியங்கா வாகனத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் விடியோ ஒன்று ச... மேலும் பார்க்க