செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

post image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டு அவா்களுக்கு எதிராக சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ்குமாா், விஜயகுமாா், திருவள்ளூா் நத்தமேடு காலனியைச் சோ்ந்த சதீஷ்குமாா் ஆகியோா் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். அதில், தங்களுக்கும் கொலைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கோரியிருந்தனா்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான பெருநகர தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜி.தேவராஜன், மனுதாரா்கள் மூன்று போ் மீதும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது”என கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதேபோல், மேலும் பல வழக்குரைஞா்கள் ஆஜராகி ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து நீதிபதி எஸ்.காா்த்திகேயன், மனுதாரா்கள் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது”எனக் கூறி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள்... மேலும் பார்க்க

இரு தனியார் பேருந்துகள் மோதல்! 50 பயணிகள் உயிர் தப்பினர்!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாட... மேலும் பார்க்க

பாா்வையற்றோருக்கு நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 21 பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க