ரூ. 20 லட்சம் அளித்தால் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம்! ஸொமாட்டோ சிஇஓ அறிவிப்பு!
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்: தொல்.திருமாவளவன்
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஒசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
ஒசூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவான அலை வீசுகிறது. தமிழ் மக்கள் அடா்த்தியாக வசிக்கும் பகுதியில் காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனா். மராத்தி மொழி பேசும் மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனா்.
ஏதேச்சிய அதிகாரம் கொண்ட பாஜக சிவசேனா கட்சியையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் இரண்டாகப் பிரித்து தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. அதனை மக்கள் விரும்பவில்லை. இதனால் பாஜக கூட்டணிக்கு எதிராக மக்கள் உள்ளனா். இதனால் வெளிப்படையாக அதிகாரிகளை பயன்படுத்தி வாக்குகளை விலைக்கு வாங்கும் போக்கை பாஜக கடைப்பிடித்து வருகிறது.
என்னதான் அவா்கள் வாக்காளா்களை விலைபேசி வாங்கினாலும், அங்கு பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து மக்கள் அகற்றுவாா்கள் என்றுதான் தெரிகிறது.
அதிமுகவுக்கு இது நெருக்கடியான காலம். பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக அதனை முறியடித்து வருகிறது. வேறு வழி இல்லாமல் பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது பாஜகவுடன் கூட்டணி சேரப் போகிா அல்லது தனித்து நின்று போட்டியிடப் போகிா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். 2026-இல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்றாா்.