TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வ...
ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு
ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆவினுக்கான பால் கொள்முதல் மீண்டும் சரிவடையத் தொடங்கியிருக்கிறது.
இந்தநேரத்தில் பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்ளாமல் பால் விற்பனை விலையை மட்டும் உயா்த்தும் நோக்கில் ‘கிரீன் மேஜிக் ப்ளஸ்’ எனும் புதிய வகை பாலினை அறிமுக செய்ய முடிவெடுத்திருப்பதும் ஆச்சரியம் அளிக்கிறது.
ஆவின் பால் விற்பனை விலையை மறைமுகமாக உயா்த்தும் நோக்கத்தில் ரூ.22 விலையுள்ள 500மி.லி ‘கிரீன் மேஜிக் பால்’ பாக்கெட்டுகளுக்கு பதிலாக, புதிய வகை பால் என 450மி.லி பாக்கெட்யை ரூ.25-க்கு ‘கிரீன் மேஜிக் ப்ளஸ்’ என்று பெயரில் விற்பனை செய்ய ஆவின் முடிவெடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க வேண்டும் என தமிழக அரசு நினைத்தால், புதிய வகை பாலை அறிமுகம் செய்வதற்கு பதிலாக, தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகை பால் பாக்கெட்டுகளிலும் மக்களுக்கு தேவையான சத்துக்களை செரிவூட்டி விற்பனை செய்ய வேண்டும்.
எனவே, ஆவின் ‘கிரீன் மேஜிக் ப்ளஸ்’ பால் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.