அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி ...
ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரியை அவுட் செய்ய பின்னோக்கிப் ஓடி கேட்ச் பிடித்தார்.
அப்போது அவரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சனிக்கிழமை டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் சோர்வாக காணப்பட்டார்.
தொடர்ந்து BCCI மருத்துவக் குழு, விரைவாகச் செயல்பட்டு அவரின் விலாப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தது.
அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விலா எலும்புக் கூண்டில் காயம் ஏற்பட்டதால், உள் இரத்தப்போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சையளிக்கப்படுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ வெளியிட்டிருக்கும் செய்தியில், ``ஷ்ரேயாஸ் கடந்த இரண்டு நாட்களாக ஐசியுவில் இருக்கிறார். குணமடைவதைப் பொறுத்து அவர் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை கண்காணிப்பில் இருப்பார்.
இப்போது நிலைமை சீராக உள்ளது. தொடக்கத்தில் மூன்று வாரங்கள் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது குணமடையும் காலம் அதிகமாக இருக்கலாம்.
அதனால் அவர் எப்போது மீண்டும் மைதானத்துக்கு வருவார் எனத் தெரியவில்லை. " எனக் கூறப்பட்டிருக்கிறது.


















