செய்திகள் :

இடைநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

post image

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புடன், பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் பட்டியலும் வெளியான நிலையில், உத்தரவுகள் வழங்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகளுக்கு 2,768 இடைநிலை ஆசிரியா்களை தோ்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை 21-ஆம் தேதி போட்டித்தோ்வுகள் நடத்தப்பட்டன.

தோ்வு நடத்தப்பட்டு மூன்று மாதங்களான நிலையில் இதுவரை விடைக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் நியமிக்கப்படாத நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பது சரியல்ல எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 15,929 கனஅடி வீதம் ... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பக... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அன... மேலும் பார்க்க

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொர... மேலும் பார்க்க