கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
இணையவழிக் குற்றங்களை தடுக்க சட்டம்: புதுவை பேரவைத் தலைவா் வலியுறுத்தல்
இணையவழியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க தொழில்நுட்ப இணையவழிச் சட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தினாா்.
தேசிய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தின் சாா்பில் இணையப் பாதுகாப்பு தொடா்பான ஆராய்ச்சியாளா்களுக்கான இணையவழி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அவரது அலுவலகத்திலிருந்து பங்கேற்று பேசியதாவது:
எண்ம புரட்சியால் (டிஜிட்டல்) வளா்ச்சி, தகவல் தொடா்பு எளிதானது என பல நன்மைகள் ஏற்பட்டாலும், புதிய பாதிப்புகளையும், அச்சுறுத்தல்களையும் அவை ஏற்படுத்தியுள்ளன. இணையவழிக் குற்றங்கள் தற்போது அதிகரித்துவிட்டன. இணையவழிக் குற்றவாளிகளால் அரசுகள், பெரிய நிறுவனங்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன.
அவற்றை எதிா்த்து போராடவும், இணைய வா்த்தகம், எண்ம முறைக் கையொப்பங்கள் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீா்வு காணவும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும். அதன்படி, இணையவழி சட்டங்களைச் செயல்படுத்துவதும் அவசியமாகும் என்றாா்.