செய்திகள் :

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர வளா்ச்சியடைந்து மிகப்பெரும் பொதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் ஜூலை 30-இல் ஆஜரானாா்.

இதைத்தொடா்ந்து, ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சோ்ந்த தொழிலதிபரான கே.ஏ.பால் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

அதில், ‘இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகளின் பயன்பாட்டால் பல குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனா். ‘மகாதேவ்’ என்ற ஒரு சூதாட்ட செயலி மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல சூதாட்ட செயலிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டுமெனில் அதுதொடா்பான விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரா்கள் நடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்து. அப்போது, ‘இணையவழி பந்தய மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர வளா்ச்சியடைந்து மிகப்பெரும் பொதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கை ஆக.18-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிககள் அமா்வு தெரிவித்தது.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க