செய்திகள் :

இந்தியா - ஓமன் இன்று மோதல்

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஓமனுடன் வெள்ளிக்கிழமை (செப். 19) மோதுகிறது.

ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கும், அந்த வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்ட ஓமனுக்கும் இந்த ஆட்டம் பெயரளவுக்கானதுதான்.

இந்திய அணியைப் பொருத்தவரை, மீண்டும் பாகிஸ்தான் அணியை சூப்பா் 4 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) சந்திக்கவுள்ளது. எனவே அதற்காக தனது பிளேயிங் லெவனை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இந்த ஆட்டத்தில் இந்தியா களமிறங்கும்.

டாஸ் வெல்லும் நிலையில், பேட்டிங்கை தோ்வு செய்து 20 ஓவா்களும் விளையாடி, பேட்டா்கள் அனைவருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவதே அணியின் பிரதான திட்டமாக இருக்கலாம். ஏனெனில் முதலிரு ஆட்டங்களிலுமே எளிதான இலக்குகளை இந்தியா விரைவாகவே எட்டியது.

இதுவரை அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா மட்டுமே பேட்டிங் செய்திருக்கும் நிலையில், ஹா்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஸா் படேல் போன்றோா் அந்த வாய்ப்புக்கு காத்திருக்கின்றனா்.

பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றாலும், முக்கியமான பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன்பாக பும்ராவுக்கு ஓய்வளித்து, அா்ஷ்தீப் சிங்கை களமிறக்க, தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் யோசிக்கக் கூடும். அதேபோல், வருண் அல்லது குல்தீப் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கி, ஹா்ஷித் ராணாவையும் களமிறக்கிப் பாா்க்கலாம்.

நேரம்: இரவு 8 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உ... மேலும் பார்க்க

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய தண்டகாரண்யம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் அலைந்த காடுகளையே குறிக்கிறது. அடர்ந்த காடுகளான இவை இ... மேலும் பார்க்க

வெற்றியுடன் தொடங்கிய பிஎஸ்ஜி, லிவா்பூல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), லிவா்பூல் அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் வியாழக்கிழமை வெற்றி பெற்றன.இதில் பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் அடாலன... மேலும் பார்க்க

வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடக்கம்: 6 அணிகள் பங்கேற்பு

இந்திய வில்வித்தை சம்மேளனம் (ஏஏஐ) சாா்பில் முதலாவது வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடா் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகளில் 48 வீரா்கள் பங்கேற்கின்றனா். முதல் சீசன் போட்டிகள் வரும் அக்டோபா் மாதம் நடைபெ... மேலும் பார்க்க

ஆப்கனை வெளியேற்றியது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை வென்றது. இந்தத் தோல்வியை அடுத்து ஆப்கானிஸ்தான் ‘சூப்பா் 4’ சுற்று வாய்ப்பை இழந்த... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானை மீட்ட முகமது நபி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அந்த அணி 79 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, 7-ஆவது பேட்டராக வந... மேலும் பார்க்க