செய்திகள் :

இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!

post image

இந்திய இசைக்கருவியை முதல்முறையாக வாசித்த பிரபல இசைக்கலைஞர் எட் ஷீரனின் விடியோ வைரலாகியுள்ளது.

"ஷேப் ஆஃப் யூ" என்ற பாடலின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன். இந்தப் பாடல் 8 ஆண்டுகளுக்கு முன்பாக யூடியூப்பில் வெளியாகி தற்போது 6 பில்லியன் (600 கோடி) பார்வைகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எட் ஷீரன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்த அவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த எட் ஷீரனிடம் இந்திய ரசிகர்கள் இந்திய கிளாசிக்கல் இசைக்கருவியான சிதாரை வாசிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

ரசிகர்களுக்காக 33 வயதாகும் எட் ஷீரன் சிதார் கலைஞர் மேகா ராவத் உதவியுடன் சிதாரை வாசித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “முதல்முறையாக சிதாரை உபயோகித்தேன். மேகா ராவத் என்ற சிறப்பான ஆசிரியர் கிடைத்தார்” எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜன.30இல் புணேவில் தொடங்கிய இவரது இசைப் பயணம் அடுத்ததாக ஹைதராபாத், சென்னையில் முடிவடைந்தது.

இன்று பெங்களூரிலும் பிப்.12ஆம் தேதி ஷில்லாங்கிலும் பிப்.15இல் தலைநகர் தில்லியிலும் இசைக் கச்சேரி நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவது... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்தில... மேலும் பார்க்க

ராமம் ராகவம் புதிய வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் எப்போது?

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத... மேலும் பார்க்க

‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் ச... மேலும் பார்க்க