விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில்...
இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!
மும்பை: நேர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலருக்கு மத்தியில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது.
அமெரிக்காவின் பொருளாதார தரவுகள் ஏமாற்றமளிப்பதால் டாலர் சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆசிய நாணயங்களின் வலிமையும், இந்திய ரூபாய்க்கு உயர்வுக்கு ஆதரவளித்தது. எனினும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் லாபம் குறைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூ.86.71 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.54 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.78 ஐ தொட்ட நிலையில், முடிவில் 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55ஆக முடிந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆகவும், கடந்த வியாழக்கிழமை அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.87.05 ஆக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,131 புள்ளிகள் உயர்வு!