செய்திகள் :

தங்கம் விலை ரூ.66,000! புதிய உச்சம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. இன்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் முதல் முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 65,000-ஐ கடந்த நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 65,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 65,680-க்கு வர்த்தகமானது.

இதையும் படிக்க : இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

செவ்வாய்க்கிழமை இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல்முறையாக ரூ. 66,000-ஐ தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 113-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பயன்படுத்தப்படாத நிலத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தர மத்திய அரசு முடிவு!

புதுதில்லி: நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால், நிலத்தின் உரிமையாளரிடமே நிலம் திருப்பித் தரும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் திருத்தம... மேலும் பார்க்க

90 நாள் இலவச ஹாட்ஸ்டார் சந்தாவை அறிமுகப்படுத்திய ஜியோ!

புதுதில்லி: ஐபிஎல் சீசன் வரவிருக்கும் நிலையில், ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது புதிய ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் இலவச ஜியோ ஹா... மேலும் பார்க்க

வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, 2025 ஏப்ரல் முதல், 2 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.ஏப்ரல் 1, 2025 முதல் நிறுவனத்தின் வணிக வாகனத்தின் விலை 2 சதவிகிதம் வரை அ... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய ரூபாய் சற்று உயர்வுடன் வ... மேலும் பார்க்க

நாட்டின் இறக்குமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

சர்வதேச அளவிலான இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் நான்காவது மாதமாக சரிந்து 36.91 பில்லியனாக உள்ளது.சர்வதேச அளவிலான போர் பதற்ற எதிரொலி மற்றும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் நாட்டின் இறக்கும... மேலும் பார்க்க

5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: உலகளாவிய வர்த்தகத்தில் இன்று ஏற்றம் கண்ட நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் இன்று வங்கிப் பங்குகளை கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.5 சதவிகிதம் வர... மேலும் பார்க்க