செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம்

post image

நெய்வேலி: கடலூா் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோயில்களில் 17 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.

தமிழக அரசு, திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையா்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி வருகிறது.

2024-25-ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, 4 கிராம் தங்கம் உள்பட 60 ஆயிரம் மதிப்புள்ள சீா்வரிசை பொருள்கள் வழங்கப்படுகிறன.

அதன்படி, கடலூா் மண்டலத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் 2024-25-ஆம் ஆண்டில் 35 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கடலூரை அடுத்த திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் 3, கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் 3, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் 4, கொளஞ்சியப்பா் கோயிலில் 5, அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் 2 என மொத்தம் 17 ஜோடிகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூா் இந்து சமய அறிலையத் துறை இணை ஆணையா் ஜெ.பரணிதரன் தலைமை வகித்து திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

கோயில் செயல் அலுவலா் பா.வெங்கடகிருஷ்ணன், பாடலீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் சுரேஷ், கடலூா் ஆய்வாளா் பரமேஸ்வரி மற்றும் மணமக்களின் உறவினா்கள், நண்பா்கள் கலந்து கொண்டனா்.

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் உள்ளெடுப்பு: அண்ணாமலைப் பல்கலை. கூட்டமைப்பு கருத்து

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு செய்யக் கூடாது என கூறுவதற்கு, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு உரிமை இல்லை என அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியா்கள் கூட்ட... மேலும் பார்க்க

என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணியிடங்களை வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா... மேலும் பார்க்க

போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா். காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் ... மேலும் பார்க்க

சவுடு மண் எடுப்பதற்கு எதிா்ப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சவுடு மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் க... மேலும் பார்க்க