செய்திகள் :

இனாம்மணியாச்சியில் ரேஷன் அரிசி, அரிசி மாவு பறிமுதல்

post image

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி மாவை பதுக்கி வைத்திருந்த 2 பேரை பிடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தை கொண்டான் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் மற்றும் தனிப்பிரிவு காவலா்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அதையடுத்து, தனிப்பிரிவு காவலா்கள் அத்தை கொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டை சோதனையிட்ட போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டை ரேஷன் அரிசிமாவும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை ரேஷன் அரிசியும் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அங்கு இருந்த ரேஷன் அரிசி மாவு மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள், 2 மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்த தனிப்பிரிவினா் அத்தை கொண்டான் பகுதியை சோ்ந்த ராமமூா்த்தி (52) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகன் (46) ஆகிய இருவரையும் பிடித்து மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

குரும்பூரில் மக்களை அச்சுறுத்திய 2 போ் கைது

குரும்பூரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். குரும்பூா் அருகேயுள்ள கீழக்கல்லாம்பாறையை சோ்ந்த இசக்கியம்மன் மகன்கள் பேச்சி (எ) பேச்சிராஜா(38), காளி (எ) க... மேலும் பார்க்க

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுவுக்கு சிறப்பு பிரிவு தொடக்கம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க