செய்திகள் :

இன்றைய ராசி பலன்கள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

22-11-2024 வெள்ளிக்கிழமை

மேஷம்:

இன்று குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்:

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்:

இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்:

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி:

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:

இன்று பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்:

இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

தனுசு:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:

இன்று மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். சக ஊழியர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்:

இன்று மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்:

இன்று தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிறகடிக்க ஆசை நடிகரின் திருமணத் தேதி அறிவிப்பு!

சிறகடிக்க ஆசை நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் திருமணத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவர... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் நவ. 23-27 அதி கனமழை: விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 23.11.2024 முதல் 27.11.2024 வரை கனமழை முதல் அதி கனமழை குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை... மேலும் பார்க்க

மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஓய்வெடுக்கும் ஆசிரியர்: வைரல் விடியோ!

வீரகனூர் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி வகுப்பறையில் ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் தாலூகாவிற்க... மேலும் பார்க்க

பிறந்த நாள் கொண்டாட்டம்: தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட மாணவர்!

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பயின்றுவரும் 23 வயது இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி, அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நவ. 13-ல் பலியானார்.கன்சாஸ்... மேலும் பார்க்க

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவ... மேலும் பார்க்க

முதல்வர் திறந்துவைத்த பட்டாபிராம் டைடல் பூங்கா: சிறப்பம்சங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவைமுதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 22) திறந்து வைத்தார்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்... மேலும் பார்க்க