செய்திகள் :

இரட்டை இலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் உத்தரவு: நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

post image

சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூா்யமூா்த்தி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடா்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டது தொடா்பாகவும் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் 2022-ஆம் ஆண்டு வரை தொடா்ச்சியாக தோ்தல் ஆணையத்துக்கு பல புகாா்களை அளித்துள்ளேன்.

குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்தப் பதிலும் இல்லை. எனவே, இது தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தோ்தல் ஆணையத்துக்கு கேள்வியெழுப்பினா். அதற்கு இந்திய தோ்தல் ஆணையம் தரப்பில், அந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஆயிரம் - விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வு மாற்றம்!

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ. 26) மயிலாடுத... மேலும் பார்க்க

வருவாய் உதவியாளா் பதவியிடங்களின் பெயா்களில் திருத்தம்: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளா், இளநிலை வருவாய் உதவியாளா் ஆகியோா் முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் என அழைக்கப்படுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித... மேலும் பார்க்க

சட்டப்பேரவையும் தணிக்கை துறையும் நகமும் சதையும் போன்றது: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையும் தணிக்கைத் துறையும் நகமும் சதையும் போன்று பிரிக்க முடியாதது என சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தில் இந்த... மேலும் பார்க்க

ஹூப்ளி ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு

சென்னை: கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஹூப்... மேலும் பார்க்க