'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை...
இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
சிவகாசி முத்தமிழ்புரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் உதயக்குமாா் (21), பொன்னுச்சாமி மகன் மாரிமுத்து (21). இருவரும் நண்பா்கள். இந்த நிலையில், மாரிமுத்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இருவரும் பராசக்தி குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினராம்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டனா். மாரிமுத்து வாகனத்தை ஓட்டினாா். காமராஜா் பூங்கா அருகே சென்றபோது, இருவரும் நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு உதயக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.