செய்திகள் :

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

post image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

தாய்லாந்து பயணத்தை முடித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இலங்கை, தலைநகர் கொழும்பு நகரத்துக்கு இன்று (ஏப்.4) மாலை சென்றடைந்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவைச் சந்திக்கும் பிரதமர் மோடி எரிசக்தி, வர்த்தகம், தகவல் தொடர்பு, நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருநாட்டு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து நாளை (ஏப்.5) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 10 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பின் முதல் முறையாக இலங்கை அதிபர் திசநாயக்க கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார்.

முன்னதாக, கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் வழங்கி உதவி செய்தது.

இதையும் படிக்க:கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந... மேலும் பார்க்க

அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்த நாள், நி... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் இலங்கை ராணுவம்!

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ராணுவப் படைகளை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் கொல்... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை: 2 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மழையூர் பக... மேலும் பார்க்க

தர்பூசணியில் ரசாயன விவகாரம்: உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவர் போஸ் சென்னையை கூடுதலாக க... மேலும் பார்க்க

மீன்பாடி வண்டி திருடர் கைது: 11 மீன்பாடி வண்டிகள் பறிமுதல்

சென்னையில் முதியவர்களை குறிவைத்து மீன் பாடி வண்டிகளைத் திருடிவந்த ஷேக் அய்யூப்(37) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 11 வண்டிகளை பறிமுதல் செய்தனர். மீன்பாடி வண்டிகளை திருடி விற்ற பணத்தில் ஆன... மேலும் பார்க்க