செய்திகள் :

`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு...' - மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்!

post image

வரவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, உச்ச நீதிமன்றம் தேர்தல் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. நீதிபதிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை நிறைவேற்றுவதை மாநில அரசுகள் தவறிவிட்டாலும், தேர்தல் காலங்களில் இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுவது குறித்து நீதிமன்றம் ஆச்சர்யம் தெரிவித்தது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மசிஹ் அடங்கிய பெஞ்ச், நீதிபதிகளுக்குப் போதுமான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டது.

இது தொடர்பாகப் பேசிய நீதிபதிகள், "மாநில அரசுகள், நீதிபதிகளின் ஊதியம் வழங்கும்போது நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டுகின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் இலவச திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை அறிவிக்க எந்த தடையுமின்றி செயல்படுகின்றன" என்று தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் சமீபத்திய சில உதாரணங்களை மேற்கோள் காட்டியது. அதில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதியின் 'லட்கி பஹின்' திட்டத்தையும், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டினர்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ‘முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,100 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால், டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

டெல்லி சட்டசபைத் தேர்தல் விவரங்கள்:-

டெல்லி சட்டசபைக்கு 70 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 அன்று நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 17 கடைசி நாளாகும், மற்றும் ஜனவரி 18-க்குள் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும்.

இந்த தேர்தல் பரப்பில், வாக்காளர்களை ஈர்க்கும் இலவச திட்டங்கள் குறித்த விவாதம் அரசியல் மற்றும் நீதித்துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: `18 மீதான குண்டர் சட்டம் ரத்து!' - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட... மேலும் பார்க்க

Simply சட்டம்: `உயில் தொடர்பாக வரும் பிரச்னைகள் என்னென்ன?’ - சொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை!

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவ... மேலும் பார்க்க

"பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்" - டெல்லி நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சு, போக்சோ (POCSO) குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

பரோலில் வந்து நண்பரைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; யார் இந்த காட்டேரி சுடலைமுத்து?

தூத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற காட்டேரி சுடலை முத்து. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது மாவட்ட முதன்மை நீத... மேலும் பார்க்க

Simply சட்டம்: `பெண்களுக்கு சொத்துக்களில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது? சட்டம் சொல்வது என்ன?’

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவ... மேலும் பார்க்க

மனைவிக்கு ஜீவனாம்சம்; மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டுவந்த கணவர்... நீதிமன்றத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் சமீபகாலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது.கோவை நீ... மேலும் பார்க்க