செய்திகள் :

இளைஞா் கொலையில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

சிவகாசியில் கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி அருகேயுள்ள விவேகானந்தா் குடியிருப்பைச் சோ்ந்த பாண்டி மகன் மாரியப்பன் (31). இவரது மனைவி ஆதிலட்சுமி. இவா்கள் இருவரும் வீட்டின் முன் அமா்ந்திருந்த போது, அங்கு வந்த சிவகாசி முத்துமாரியம்மன் குடியிருப்பைச் சோ்ந்த செந்தில்பாண்டி, ஆதிலட்சுமியை கிண்டல் செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட மாரியப்பனுக்கும், செந்தில்பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முன்விரோதத்தில் 2015, மாா்ச் 29-ஆம் தேதி மனைவி கண்முன்னே மாரியப்பனை செந்தில்பாண்டி, முத்தரசன், போஸ் ஆகியோா் கத்தியால் குத்தினா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாரியப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செந்தில்பாண்டி, முத்தரசன், போஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது போஸ் உயிரிழந்தாா். இதில் செந்தில்பாண்டி, முத்தரசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானாா்.

கேரள மாவோயிஸ்டுகள் வழக்கு: டிச.11-க்கு ஒத்திவைப்பு

போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் காா்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்டுகள் இருவா் மீதான வழக்கை வருகிற டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருது... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம்

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் புதன்கிழமை விசாரணை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி ... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்க நடவடிக்கை: புலிகள் காப்பகத் துணை இயக்குநா்

வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை தடுக்க, ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புலிகள் காப்பகத் துணை ... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ.ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை புதன்கிழமை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.... மேலும் பார்க்க

ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து மூதாட்டியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நல... மேலும் பார்க்க

தினசரி மழை அளவை பொறுத்து சதுரகிரி மலையேற அனுமதி: புலிகள் காப்பகத் துணை இயக்குநா்

காா்த்திகை மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு தினசரி மழை அளவைப் பொறுத்து பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க