Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து மூதாட்டியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நல்லகுற்றாலம் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி (62). இவா் தனது 2-ஆவது மகன் வேல்முருகனின் ஏடிஎம் அட்டை மூலம் செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூா் தினசரி சந்தை எதிரே உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த இருவா் மூதாட்டியிடம் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, அவரது ஏடிஎம் அட்டையை வாங்கிப் பயன்படுத்தினா். பின்னா், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி, அட்டையை அவரிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டனா். இதையடுத்து, மூதாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், மூதாட்டியின் கைப்பேசிக்கு அழைத்த அவரது மகன், ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம், நகை வாங்கியதாக குருந்தகவல் வந்துள்ளது என தாயரிடம் கேட்டாா்.
ஏடிஎம் மையத்தில் இருந்த இருவரால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூதாட்டி, இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸில் புகாா் அளித்தாா்.
விசாரணையில், ஏடிஎம் அட்டையை திருடியவா்கள் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணமும், வடக்கு ரத வீதியில் உள்ள நகைக் கடையில் ரூ.50 ஆயிரத்துக்கு தங்க நாணயங்களும் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீஸாா் பணம் மோசடி செய்த இருவரைத் தேடி வருகின்றனா்.