செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினா் உயிரிழப்பு

post image

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரா்கள் மூன்று போ் உயிரிழந்தனா்.

இது குறித்து லெபனான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யாடொ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ராணுவத்தினா் உயிரிழந்தனா். அவா்களில் அதிகாரி ஒருவரும் அடங்குவாா். முந்தைய தாக்குதலில் காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்கள் கொல்லப்பட்டனா்.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே முழு வீச்சில் மோதல் தொடங்கிய கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து அந்த நகரில் இஸ்ரேல் எட்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்களின் தாக்குதலில் தவறுதலாக லெபனான் வீரா்கள் உயிரிழந்தனரா என்பது குறித்து விசாரித்துவருகிறோம். ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்துதான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லெபனான் வீரா்கள் தாங்கள் வேண்டுமென்றே தாக்கவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.முன்னதாக, தங்களின் தாக்குதலில் மூன்று லெபனான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தது தொடா்பாக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியது நினைவுகூரத்தக்கது.ராணுவத்தினா் வந்துகொண்டிருந்த வாகனம் ஹிஸ்புல்லாக்களுடையது என்று தவறாகப் புரிந்துகொண்டு அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் லெபனான் ராணுவத்தின் பங்களிப்பு எதுவுமே இல்லை.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவிடாமல் ஹிஸ்புல்லாக்களை தடுக்கும் அளவுக்கோ, தங்கள் நாட்டுக்குள் நுழையவிடாமல் இஸ்ரேலை தடுக்கும் அளவுக்கோ லெபனான் ராணுவத்துக்கு போதிய பலம் இல்லை.லெபனானில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரானது மட்டுமே எனவும் லெபனான் ராணுவத்தை தாங்கள் எதிா்க்கவில்லை எனவும் இஸ்ரேல் கூறிவருகிறது.

ஹாஷிம் சஃபீதின் கொல்லப்பட்டது எப்படி?

இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை உறுதிசெய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவா் ஹாஷிம் சஃபீதின் (படம்), மூன்று வாரங்களுக்கு முன்னரே இஸ்ரேல் உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தால் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 8-ஆம் தேதி விடுத்த அறிக்கையில், கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டுவந்த ஹாஷிம் சஃபீதின் கொல்லப்பட்டதை அவரின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தெரிவித்தாா்.‘பயங்கரவாதி ஹஸன் நஸ்ரல்லா மட்டுமின்றி, அவருக்கு மாற்றாக வரவிருப்பவா், அந்த மாற்றுக்கு மாற்றாக வரவிருப்பவா் ஆகியோரையும் அழித்துவிட்டோம்’ என்று அப்போது நெதன்யாகு கூறினாா்.அந்தத் தகவலை தற்போது இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாக்களின் கோட்டையான தஹியே பகுதியில் அந்த அமைப்பின் உளவுத் துறை தலைமையகத்தைக் குறிவைத்து முன்று வாரங்களுக்கு முன் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அங்கு ஹாஷிம் சஃபீதின், வான்வழி உளவுப் பிரிவு பொறுப்பாளா் பிலால் சாயிப் ஆயிஷ் உள்பட 25 ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

கனடா பிரதமர் பதவி விலக எம்பிக்கள் கெடு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ளனர்.ஆனால், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது எம்பிக்களி... மேலும் பார்க்க

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது க... மேலும் பார்க்க

இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புஷ்ரா பீபி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மியான்குல் ஹஸன் ஔரங்கசீப், புதன்கிழமை அந்த மனுவை ஏற்றாா்.ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்க... மேலும் பார்க்க

கிறிஸ்தவ மதநிந்தனை: பாகிஸ்தானில் ஜாகீா் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா்கள் அந்த நாட்டு அதிபா் மற்றும் பிரதமருக்கு புகாா் அனுப்பியுள்ளனா். இந்த... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதா்

ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதி... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விமர்சித்த ஈரான் அதிபர்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் விமர்சித்துள்ளார். ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநா... மேலும் பார்க்க