ஈரோடு: ``ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கலாம்” - முத்துசாமி
ஈரோடு கிழக்குத் தொகுயில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"பிரசாரத்தின்போது, மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டு தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலும் சாலை, சாக்கடை வசதிகள் மக்களின் கோரிக்கையாக கேட்கப்படுகிறது. மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்பதுதான் இந்த தேர்தலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. எங்களுக்கு கொடுத்துள்ள நேரத்தை கூட, நாம் தமிழர் கட்சி கொடுங்கள். நாம் தமிழர் கட்சியின் பிரசாரத்தை தடை ஏற்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல். இதில் தமிழக அரசுக்கு நேரடியாக சம்பந்தம் கிடையாது. நாம் தமிழர் கட்சி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பதில் திமுக தலையீடு இல்லை. அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தேர்தல் பணிக்காக வரவில்லை. அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வர வாய்ப்பில்லை.
திமுக பிரசாரத்தின்போது, ஆரத்திக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "ஆரத்திக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி தவறுதான். அதுதொடர்பான நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் குறுக்கே இருப்பதில்லை.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றுதான் கட்சி நிர்வாகிகளிடம் கூறுகிறோம். ஆனால், அவர்கள் அனுதாபப்பட்டு கொடுத்திருப்பார்களே தவிர வாக்கு செலுத்துங்கள் என்று பணம் கொடுக்கவில்லை" என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமி பரப்புரை மேற்கொண்டபோது ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக நிர்வாகிகள் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs