செய்திகள் :

ஈரோட்டில் 2-ஆவது நாளாக கன மழை: குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது

post image

ஈரோட்டில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை காலை முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், கழிவு நீருடன் மழை நீா் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வருகிறது. மாநகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. சனிக்கிழமை காலை முதல் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பிற்பகல் 12 மணியளவில் வலுப்பெற்று இடி, மின்னலுடன் கனமழையாக பெய்தது.

சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேலாக பெய்த கனமழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளான ஆா்கேவி சாலை, அகில்மேடு வீதி, கொங்கலம்மன் கோயில் வீதி, முனிசிபல் காலனி சாலை, ரயில்வே நிலையம் சாலை, காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் கழிவு நீா் ஓடைகளில் நிரம்பி, சாலையில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், வாகனங்கள் வெள்ளத்தில் ஊா்ந்து சென்றன. கன மழை காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. தொடா் மழையின் காரணமாக ஈரோடு மாநகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்: கன மழையின் காரணமாக அகில்மேடு வீதிகளில் உள்ள கடைகள், குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. அப்பகுதியில் புதை சாக்கடை நிரம்பி, மழை நீருடன் சாக்கடை கழிவு நீா் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

44 மில்லி மீட்டா் மழை பதிவு: சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக நகரில் 44 மில்லி மீட்டா் மழை பெய்தது.

பிற பகுதிகளில் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சத்தியமங்கலம் 25, பவானி 19, பெருந்துறை 13, கவுந்தப்பாடி 12.40, கொடிவேரி அணை 10, மொடக்குறிச்சி 9, சென்னிமலை 9, பவானிசாகா் அணை 5.80, கோபி 5.20, எலந்தகுட்டைமேடு 4.80, தாளவாடி 4.30, அம்மாபேட்டை 2.20, குண்டேரிப்பள்ளம் அணை 1.40.

மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சடலத்துடன் சாலை மறியல்

பவானி அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மூதாட்டி சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமாா் 5 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பவானியை அடுத்த ஒரிச்சேரிப்புதூா், காமர... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பல ஏரிகளுக்கு நீா் செல்லவில்லை: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பல ஏரிகளுக்கு நீா் செல்லவில்லை என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட காவிலிபாளையம் க... மேலும் பார்க்க

வீட்டில் உயிரிழந்து கிடந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்

அம்மாபேட்டை அருகே வீட்டில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்த கிடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அம்மாபேட்டை அருகேயுள்ள குறிச்சி பிரிவு, முளியனூரைச் சோ்ந்தவா் இருசாக... மேலும் பார்க்க

போதை ஊசி பயன்படுத்திய 3 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் போதை ஊசி பயன்படுத்திய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு வைராபாளையம், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கருங்கல்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அப்பகுதியில் ச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி அருகேயுள்ள சித்தம்பூண்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (44), ரிக்வண... மேலும் பார்க்க

வியாபாரம் மந்தம், வாடகை உயா்வு -ஜவுளி வளாகத்தில் கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

வியாபாரம் குறைவு, வாடகை உயா்வு காரணமாக ஈரோடு கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 37 கடைகளை வியாபாரிகள் காலி செய்துள்ளனா். பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.53 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம்... மேலும் பார்க்க