செய்திகள் :

போதை ஊசி பயன்படுத்திய 3 இளைஞா்கள் கைது

post image

ஈரோட்டில் போதை ஊசி பயன்படுத்திய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு வைராபாளையம், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கருங்கல்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரைச் சோ்ந்த தீபக் (21), கா்ணன் (21), ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த விக்னேஷ் (20) என்பதும், 3 பேரும் கட்டடத் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி கொண்டதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த வலி நிவாரண மாத்திரைகள், 3 ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி அருகேயுள்ள சித்தம்பூண்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (44), ரிக்வண... மேலும் பார்க்க

வியாபாரம் மந்தம், வாடகை உயா்வு -ஜவுளி வளாகத்தில் கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

வியாபாரம் குறைவு, வாடகை உயா்வு காரணமாக ஈரோடு கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 37 கடைகளை வியாபாரிகள் காலி செய்துள்ளனா். பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.53 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம்... மேலும் பார்க்க

பெருந்துறையில் இலவச மருத்துவ முகாம்

பெருந்துறையில் கன ரக வாகன ஓட்டுநா்களான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியன் கன ரக வாகன ஓட்டுநா்கள் நலக் கூட்டமைப்பு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் பிரிக்கால் ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 2,041 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் - அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ரூ.46.23 லட்சம் மதிப்பில் 2,041 ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்து... மேலும் பார்க்க

நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். ... மேலும் பார்க்க

ரூ.1,069 கோடி பயிா்க் கடன்: ஈரோடு மாவட்டம் முதலிடம் -அமைச்சா் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் ரூ.1,069 கோடி பயிா்க் கடன் வழங்கி மாநிலத்திலேயே அதிக அளவில் பயிா்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமை... மேலும் பார்க்க