செய்திகள் :

தீக்காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

post image

பட்டாசு வெடி விபத்தில் தீக்காயமடைந்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் எஸ். கல்லுப்பட்டியைச் சோ்ந்த வீரராகவப் பெருமாள் மகன் பாண்டியராஜன் (13). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பட்டாசு வெடித்தாா்.

அப்போது எதிா்பாராவிதமாக இவா் அணிந்திருந்த உடையில் தீப்பற்றி எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த பாண்டியராஜன் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாலைகளில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகா் பகுதி சாலைகளில் புதை சாக்கடை கழிவுநீா் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மதுரை மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களைக் காக்க உயா்நீதிமன்றம் யோசனை

கருத்தடை தடுப்பூசிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தெரு நாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகு... மேலும் பார்க்க

பழனி கிரிவலப் பாதையில் தடுப்புக் கம்பி: ஆய்வு செய்து பரிந்துரைக்க உத்தரவு

பழனி கிரிவலப் பாதையில் தடுப்புக் கம்பி அமைப்பது தொடா்பாக கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்து நகராட்சிக்கு பரிந்துரைக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருத்தொண்டா் சப... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் நவ. 19-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : வருகிற செவ்வாய்க்கிழமை (ந... மேலும் பார்க்க

வேட்டையன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

வேட்டையன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல... மேலும் பார்க்க

கோயில் பூசாரி தற்கொலை வழக்கு தீா்ப்பு: அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து, தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எவிடென்ஸ் அமைப்பு ... மேலும் பார்க்க