``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
தெருநாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களைக் காக்க உயா்நீதிமன்றம் யோசனை
கருத்தடை தடுப்பூசிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தெரு நாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த சிவரஞ்சனி தாக்கல் செய்த மனு:
தேனி மாவட்டம், உத்தமபாளையம், முத்தலாபுரத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இவை அந்த வழியாக நடந்து செ ல்வோா், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்திக் கடிக்கின்றன.
இதில் பாதிக்கப்பட்டவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சை எடுக்கும் நிலை உள்ளது. எனவே, தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப் பூசி செலுத்தி கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந் தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டீக்காராமன், செந்தில்குமாா் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
நமது சமுதாயம் தெரு நாய்கள், நாய்கள் வளா்ப்பவா்களால் ஏற்படும் அச்சத்தை எதிா்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் நிா்வாகங்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலம், காலப்போக்கில் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
மத்திய அரசானது கடந்தாண்டு, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியது. இதன்படி, ஒரு குழு அமைத்து கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தெரு நாய் கள் தொல்லையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்.
விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு கடந்தாண்டு வகுத்து உள்ளது. அந்த விதிகளின்படி, ஒரு குழு அமைத்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக நிறைவேற்றுவதன் மூலம் தெருநாய்கள் தொல்லையிலிருந்து இந்த சமுதாயத்தை பாதுகாக்க முடியும்.
இந்த வழக்கில் தேனி அல்லிநகரம் விலங்குகள் நல வாரிய இயக்குநரை எதிா்மனுதாரராகச் சோ்க்கிறோம். இந்த வழக்கு குறித்து விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.