செய்திகள் :

மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் நவ. 19-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

post image

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.19) முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் மேயா் வ. இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, மண்டலம் 4-க்கு உள்பட்ட செல்லூா், ஆழ்வாா்புரம், ஐராவதநல்லூா், காமராஜா் சாலை, பங்கஜம் குடியிருப்பு, சோ்மன் முத்துராமய்யா் சாலை, காமராஜபுரம், பழைய குயவா்பாளையம், சின்னக்கடைத் தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகா், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிா்வேல் நகா் ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில் வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

வேட்டையன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

வேட்டையன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல... மேலும் பார்க்க

கோயில் பூசாரி தற்கொலை வழக்கு தீா்ப்பு: அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து, தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எவிடென்ஸ் அமைப்பு ... மேலும் பார்க்க

கல் குவாரிகள் மறுசீரமைப்பு: கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை மறுசீரமைப்பு செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

மின் வாரிய ஓய்வூதியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

தல்லாகுளம், வாடிப்பட்டியில் இன்று மின் தடை

தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாள... மேலும் பார்க்க

கலைத் திருவிழாப் போட்டிகள்

மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் 3 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலைத் திருவிழாப் போட்... மேலும் பார்க்க