தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?
கலைத் திருவிழாப் போட்டிகள்
மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் 3 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலைத் திருவிழாப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2024 -25-ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கவின் கலை, இசை, கருவியிசை, நடனம், நாடகம் என மொத்தம் 30 வகையான போட்டிகள் பள்ளி, குறு வள மையம், வட்டார அளவில் நடைபெற்றது.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள் குறு வள மைய, வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனா். வட்டார அளவில் 3,790 வெற்றி பெற்றனா்.
இந்த நிலையில், மாவட்ட அளவிலான கலைத் திறன் போட்டிகள் மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, ஓசி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து இந்தப் போட்டிகள் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை
நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திறன் போட்டிகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இந்தப் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்ற 3, 790 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பா். மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு தமிழக அரசின் சாா்பில் கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.