செய்திகள் :

கோயில் பூசாரி தற்கொலை வழக்கு தீா்ப்பு: அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

post image

பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து, தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியது.

இதுதொடா்பாக மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் ஏ.கதிா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி. கள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (65). பட்டியலினத்தைச் சோ்ந்தவா். இவரது மூத்த மகன் நாகமுத்து. இவா் அந்தப் பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இந்தக் கோயிலின் அறங்காவலா் குழு உறுப்பினா் பழனிச்சாமி, வெங்கடசாமி ஆகியோா் கடந்த 2012, மே 5-ஆம் தேதி நாகமுத்துவை ஜாதி ரீதியாக இழிவாகப் பேசி, அவரைத் தாக்கினா். இதுகுறித்து அவா் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், அங்கு வழக்குப் பதியாமல் புகாா் ஏற்பு ரசீது மட்டும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அப்போதைய பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் ஓ.ராஜா (முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா்) காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெறக் கோரி, நாகமுத்துவை மிரட்டினாராம்.

தொடா் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான நாகமுத்து கடந்த 2012, டிசம்பா் 7-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, ஓ.ராஜா உள்பட 7 போ் மீது தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவா் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனா். வன்கொடுமை வழக்கைப் பொருத்தவரை, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மூன்றே மாதங்களில் தீா்ப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டே உத்தரவிட்டது. இருப்பினும், வழக்கு விசாரணை 9 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா். எனவே, இந்த வழக்கின் தீா்ப்பு தொடா்பாக, தமிழக அரசு உடனடியாக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

தற்கொலை செய்த நாகமுத்துவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அவரது தங்கை பாண்டிமுருகுவுக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். நாகமுத்துவின் பெற்றோருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

வேட்டையன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

வேட்டையன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல... மேலும் பார்க்க

கல் குவாரிகள் மறுசீரமைப்பு: கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை மறுசீரமைப்பு செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

மின் வாரிய ஓய்வூதியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

தல்லாகுளம், வாடிப்பட்டியில் இன்று மின் தடை

தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாள... மேலும் பார்க்க

கலைத் திருவிழாப் போட்டிகள்

மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் 3 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலைத் திருவிழாப் போட்... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளா்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்... மேலும் பார்க்க