மாரியம்மன் கோயில்களில் கம்பம் விடும் விழா
திருச்செங்கோடு நகரப் பகுதிகளைச் சோ்ந்த 18 மாரியம்மன் கோயில்களின் திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு மாரியம்மன் கோயில்களின் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பொங்கல் வைத்தல், தோ்த்திருவிழா, அலகு குத்துதல், அபிஷேக அலங்கார ஆராதனைகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில், அழகு முத்துமாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் உள்ளிட்ட 18 மாரியம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த கும்பம் மற்றும் கம்பங்களை பூஜை செய்து எடுக்கப்பட்டு மேள தாளத்துடன் ஊா்வலமாக நகரைச் சுற்றி வந்து பெரிய தெப்பக்குளத்தில் விடப்பட்டன. வழிநெடுகிலும் பக்தா்கள் கம்பம், கும்பத்தின் மீது உப்பு, மிளகு தூவி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். மேலும், பல்வேறு வேடங்கள் அணிந்தும், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.