செய்திகள் :

``உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா ராணுவம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டு

post image

"ரஷ்யா சார்பில் ரஷ்ய - உக்ரைன் போரில் கலந்துகொள்ள 3,000 ராணுவ வீரர்கள் வட கொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, இப்போது வரை நடந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினிடம் இதுகுறித்து வலியுறுத்தினர்.

அக்டோபர் மாதம்...

இந்த நிலையில், தற்போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின், "வட கொரியா ராணுவ படை ரஷ்யாவில் இருப்பதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. உக்ரைன் கூறியதுப்போல, வட கொரியா வீரர்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் கலந்துகொள்ள ரஷ்யாவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்றால், அது மிக மிக மோசமான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "3,000 வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி மேற்கொள்வதாக அமெரிக்கா நம்புகிறது. இந்த ராணுவ வீரர்கள் கப்பல் மூலம் அக்டோபர் மாதம் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர். இவர்கள் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டால், ரஷ்ய வீரர்களை எதிர்த்து எப்படி உக்ரைன் வீரர்கள் போராடுகிறார்களோ, அதே மாதிரி இவர்களை எதிர்த்தும் அவர்கள் போராடுவார்கள்" என்று கூறியுள்ளார்.

இது 'முற்றிலும் பொய்யான செய்தி' என்று முன்னரே ரஷ்யா மறுத்துள்ளது. வட கொரியா பிரதிநிதிகள் கூட, 'ஆதரமற்ற புரளி' என்று கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

வயநாடு வேட்புமனு தாக்கல்... பிரியங்கா - ராபர்ட் வதேரா சொத்து மதிப்பு விவரங்கள்!

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தாக்கரே வியூகத்தை உடைத்து சொந்த ஊரில் ஜெயிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்... மேலும் பார்க்க

BRICS: ``உலக அமைதிக்கு இந்திய - சீன உறவு அவசியம்'' பிரதமர் மோடி பேச்சு.. சீன அதிபர் ஜின் பிங் ஆதரவு!

கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கின் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை, பிரதமர் மோடி ரஷ... மேலும் பார்க்க

Vijay-ஐ வாட்ச் பண்ணும் உளவுத்துறை... ரூட் போடும் EPS! | Elangovan Explains

திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்னைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். ... மேலும் பார்க்க

EPS அணிக்கு IT... OPS அணிக்கு ED - Raid பின்னணி என்ன? | MK STALIN | MODI | Priyanka |Imperfect Show

* ED Raid: தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு; வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை* எடப்பாடியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ஐடி சோதனை!* மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்பில் எடப்பாடி - சாத்தியம்தானா?

விமர்சிக்கும் எடப்பாடி!திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொடர்ந்து மனக்கசப்பு ஏற்படுவது அதிகரித்துக்கொண்டே போகிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்களே சொன்னாலும் அவை அனைத... மேலும் பார்க்க