பரந்தூர் போராட்டக் குழுவினருடன் தவெக தலைவர் விஜய் நாளை சந்திப்பு!
உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
19.01.2025
மேஷம்
இன்று அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயர்வடையும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ரிஷபம்
இன்று ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம்
இன்று குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்
இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
சிம்மம்
இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கன்னி
இன்று சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
துலாம்
இன்று கொடுக்கல்-வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபமும் பெரிய மனிதர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
விருச்சிகம்
இன்று பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதிக்கமுடியும். வழக்குகள் பைசலாகும். தொழில், வியாபாரம் பிரச்சினையின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
தனுசு
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மகரம்
இன்று தொழிலை விரிவுபடுத்த அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
கும்பம்
இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அடைவீர்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சம்பள பாக்கிகள் யாவும் உத்தியோகஸ்தர்களுக்குக் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
மீனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக்கள் மேலும் உங்களின் உயர்வுகளுக்கு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9