செய்திகள் :

உணவுப்பொருள் கிடங்கில் அரிசி மூட்டைகள் கடத்திய வழக்கு: 5 போ் கைது

post image

உணவு சேமிப்புக் கிடங்கிலிருந்து 450 அரிசி மூட்டைகளை லாரிகளில் கடத்தியதாக கூறப்படும் வழக்கில் லாரி உரிமையாளா், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட 5 பேரை திருபுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள திருவண்டாா்கோயிலில் உணவுப் பாதுகாப்பு சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து லாரிகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அரிசி மூட்டைகளை லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க பலா் ஒப்பந்தம் செய்துள்ளனா்.

அதன்படி, கண்டமங்கலத்தைச் சோ்ந்த ஜெயசீலனின் லாரியில் அரிசி விநியோகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேமிப்புக் கிடங்கிலிருந்த 450 அரிசி மூடைகள் ஜெயசீலன் லாரியில் ஏற்றப்பட்டு கிடங்கில் எடை பாா்க்காமலும், உரிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் இன்றியும் வெளியே கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவுப்பொருள் பாதுகாப்புப் பிரிவின் மண்டல மேலாளா் மம்தாராணி திருபுவனை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, 450 மூட்டைகள் அரிசியுடன் சென்ற லாரியைக் கைப்பற்றிய போலீஸாா், லாரி உரிமையாளா் ஜெயசீலன், ஓட்டுநா் மருதுபாண்டியன் மற்றும் சேமிப்புக் கிடங்கின் பணியாளா்கள் குணாளன், பிகாரைச் சோ்ந்த சுனில்குமாா், சேலத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனா்.

கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக, தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் ... மேலும் பார்க்க

புதுவை பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

புதுவையில் தனியாா் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்: புதுவையில் உ... மேலும் பார்க்க

கூட்டு முயற்சியால் சாலை விபத்துகளை தடுக்க முடியும்: புதுவை துணைநிலை ஆளுநா்

கூட்டு முயற்சியால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் கடந்த 1-ஆம் த... மேலும் பார்க்க

இணையவழிக் குற்றங்களை தடுக்க சட்டம்: புதுவை பேரவைத் தலைவா் வலியுறுத்தல்

இணையவழியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க தொழில்நுட்ப இணையவழிச் சட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தினாா். தேசிய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு ம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.1) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி வேலைவாய்ப்பு துணை பிராந்திய அதிகாரி ச.கோட்டூா்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா், ... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரிக்கு தோ்தல் துறை விருது

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரிக்கு மாநில அளவிலான சிறந்த வாக்காளா் கல்விக் குழு விருதை தோ்தல் துறை வழங்கி பாராட்டியது. மக்களவைத் தோ்தலின் போது வாக்காளா் சோ்ப்பு, தோ்த... மேலும் பார்க்க