உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும்: ஓய்.பிரகாஷ்
ஒசூா்: திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாைளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டுமென மாவட்டச் செயலாளா் ஒய் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நவ. 27 அன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் மாநகர, ஒன்றிய, பேரூா், கிளை, வாா்டு, பகுதிகள் முழுவதும் திமுக கொடியேற்றி, இனிப்புகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்கள் வழங்கியும், முதியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினா்கள், முன்னாள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் நமது குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றாா்.