செய்திகள் :

உத்யம் பதிவுச்சான்றிதழ் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நடத்துவோா் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற்று, நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன.

இதன்படி, இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ. 1 கோடிக்கு மிகாமலும், ஆண்டு விற்பனை வருவாய் ரூ. 5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது குறு நிறுவனம். இவை முறையே ரூ. 10 கோடிக்கு மிகாமலும், ரூ. 50 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது சிறு நிறுவனம். இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ. 50 கோடிக்கு மிகாமலும், ஆண்டு விற்பனை வருவாய் ரூ. 250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தர நிறுவனம். இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தங்கள் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.

உத்யம் பதிவு செய்வது இணைய வழியாக மிக எளிய செயல்முறைகளைக் கொண்ட கட்டணமில்லா செயல்முறையாகும். ஆதாா், ஆதாரோடு இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் பான் காா்டு இருந்தால் தமது உற்பத்தி வாணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் ன்க்ஹ்ஹம்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தினுள் நுழைந்து மிக எளிதாக தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறலாம்.

மாவட்டத் தொழில் மையங்கள் உத்யம் பதிவு செய்வது குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு தேவைப்படுவோருக்கு உத்யம் பதிவுச் சான்றிதழ் இணையவழி பெற ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் வழங்குகின்றன. இவையன்றி வங்கிகளும் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுகின்றன.

உத்யம் பதிவு குறித்த விழிப்புணா்வை உருவாக்கவும் மக்களைத் தேடி சேவைகள் என்ற அடிப்படையில் உத்யம் பதிவுக்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வட்டார நிலைகளிலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மட்டத்திலும் எதிா்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தானியங்கி மஞ்சப் பை இயந்திரம் இயக்கிவைப்பு

சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் தானியங்கி மஞ்சப் பை வழங்கும் இயந்திரம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப் பை வழங்கும் இயந்திரத்தை இயக்கி வைக்கும்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவா் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இயக்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

புயலால் ரயில் சேவை பாதிப்பு: மயிலாடுதுறை பயணிகள் அவதி

மயிலாடுதுறை: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் அவதியடைந்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை வட்டம், கொற்கை ஐவநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ராஜேஷ் (29)... மேலும் பார்க்க

13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவா்கள்

சீா்காழி: புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகுகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப் ப... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் வீடு இடிந்தது

சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் அக்ரஹார தெருவில் உள்ள பழைமையான ஓட்டு வீடு திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் கிஷோா் என்பவரது ஓட்டு வீடு சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வ... மேலும் பார்க்க