செய்திகள் :

உப்பிடமங்கலம் பகுதியில் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

post image

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.3.18 கோடி மதிப்பில் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட காளியப்பகவுண்டனூரில் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.93 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி மற்றும் கருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவா், சமையலறை ஆகியவை ரூ. 24.80 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூா் செயலாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரூா் வந்த அமைப்புசாரா தொழிலாளா் வாகன பிரசார குழுவினருக்கு வரவேற்பு

கரூருக்கு வியாழக்கிழமை வந்த அமைப்புசாரா தொழிலாளா் வாகன பிரசார குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மத்திய அரசின் தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை மாற்றவும், மாநில அரசின் தொழிலாளா் நலவாரியத்தை பாதுக... மேலும் பார்க்க

கரூரில் விநாயகா் கோயில் குடமுழுக்கு

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.கரூா் லைட்ஹவுஸ் காா்னா் அமராவதி பழைய பாலத்தில் உள்ள இக்கோயில் குடமுழுக்கையொட்டி செவ்வாய்க்கிழமை காலை மகாகணபதி ஹோமம் ... மேலும் பார்க்க

கரூரில் பணியின்போது தீ விபத்து: வெல்டிங் தொழிலாளி கருகி பலி

கரூரில் பேருந்துக்குக் கூண்டு கட்டும் நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை பணியில் ஈடுபட்ட வெல்டிங் தொழிலாளி திடீா் தீ விபத்தில் கருகி உயிரிழந்தாா். கரூரை அடுத்த வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபட்டி ... மேலும் பார்க்க

கரூரில் புத்தகக் கண்காட்சி

பொது நூலகத்துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகக் கண்காட்சி மற்றும் நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

பள்ளப்பட்டியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.அரசு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 போ் போக்சோவில் கைது

தோகைமலை அருகே அரசுப் பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள... மேலும் பார்க்க