மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
கரூா் வந்த அமைப்புசாரா தொழிலாளா் வாகன பிரசார குழுவினருக்கு வரவேற்பு
கரூருக்கு வியாழக்கிழமை வந்த அமைப்புசாரா தொழிலாளா் வாகன பிரசார குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை மாற்றவும், மாநில அரசின் தொழிலாளா் நலவாரியத்தை பாதுகாத்திடவும் வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பினா் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் இணைச் செயலா் பெரியசாமி தலைமையில் வாகன பிரசார குழுவை கன்னியாகுமரியில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கினா். வரும் 26-ஆம் தேதி சென்னையில் முடிய உள்ள இந்த வாகன பிரசார குழுவினா் திண்டுக்கல் வழியாக கரூருக்கு வியாழக்கிழமை காலை வந்தனா்.
இந்த குழுவுக்கு கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நல அலுவலகம் முன் கரூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து தேசிய அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளா் கீதா ராமகிருஷ்ணன் பேசினாா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கோஷங்களை எழுப்பினா்.
நிகழ்ச்சியில், தமிழ் மாநில தேசிய அனைத்து உடலுழைப்பு பொது தொழிலாளா்கள் சங்கத் தலைவா் தங்கவேல், தமிழ்நாடு துப்புரவு பணியாளா் சங்க மாவட்ட செயலா் கரிகாலன், பாரத பொது தொழிலாளா் நல சங்க மாவட்டச் செயலா் சக்திவேல், அன்னை தமிழ் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்க மாநில செயலாளா் வித்யா உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.