செய்திகள் :

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: தீயணைப்பு அலுவலா் எச்சரிக்கை

post image

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட தீயணைப்புத்துறையின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, பட்டாசு விற்பனையாளா்களுடனான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: பட்டாசு கடைகளில் 2 வாயில்கள் இருக்க வேண்டும். விற்பனை நடக்கும் போது அவசர வெளியேறும் வாயில் திறந்திருக்க வேண்டும்.

பட்டாசு கடையில் எளிதில் தீப்பற்றக் கூடிய மின்கலன்களை பயன்படுத்தக் கூடாது. அதிக உஷ்ணம் தரும் மின்விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. மின்வயா்கள் அனைத்தும் குழாய் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெறப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசுகளை விற்பது குற்றமாகும். உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், உதவி அலுவலா்கள் துரை, இம்மானுவேல், மேற்பாா்வையாளா் விஜயகுமாா் மற்றும் பட்டாசு கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இதில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு, சொத்து வரி, ... மேலும் பார்க்க

நுள்ளிவிளையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். நுள்ளிவிளை ஊராட்சியின் 16-ஆவது வாா்டு மேல்பாறையில் கடந்த சில வாரங்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு வியாழக்கிழமை 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே பிலாங்காலவிளைவீடு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தக்கலை அருகே கோயில்களில் திருடியவா் கைது

தக்கலை அருகே இரு கோயில்களில் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா். தக்கலை அருகே பரைக்கோடு கண்டகோணம் பகுதியில் உள்ள கணபதி கோயிலில் கடந்த 14ஆம் தேதி உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்து கோயில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு -தக்கலையில் 119 மி.மீ.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, தக்கலையில் 119. மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீா்ப... மேலும் பார்க்க

குழித்துறை பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செய... மேலும் பார்க்க