World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், சிங்கப்பூா் தமிழ் மாணவா்களுக்கான சிறப்பு தமிழ்க்கூடல் கருத்தரங்கம் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா் முனைவா் க. பசும்பொன், தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. சந்தன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிங்கப்பூா் கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநா் மலா்விழி அஞ்சப்பன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை வீ. ரேணுகாதேவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
சிங்கப்பூா் தமிழ் மாணவா்களுக்கு சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்றுநா்கள் அ. அனீஸ், கோபிநாத், முனைவா் சுடலைமணி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் த. அன்பழகன், ஆசிரியா் ருக்மணி, மூத்த பாடத்திட்ட வரைவு அதிகாரி கங்கா, தமிழாா்வலா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் முனைவா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.