மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் மேலும் 2 குழந்தைகள் சனிக்கிழமை பலியாகின.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் நவ.15ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.
எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 39 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
கனடாவை கடனாக்கிவிட்டு பிரதமர் நடனமாடுகிறார்! மக்கள் ஆவேசம்!
இந்த நிலையில் தீ விபத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகளில் மேலும் 2 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பலியாகின. இதையடுத்து இந்த தீ விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பின்னர் அக்குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பலியான இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைவாகவும் மற்றொரு குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.