கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
ஊட்டசத்து உறுதிசெய் திட்டம் தென்காசியில் தொடக்கம்
இளம் தாய்மாா்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தியுள்ள ஊட்டச்சத்து உறுதி செய்த திட்டத்தின் தொடக்க விழா தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி நகராட்சி மேல பாறையடித் தெரு சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து
பெட்டகத்தை வழங்கினாா். அவா் பேசுகையில், தென்காசி மாவட்டத்தில் கடுமையான எடை குறைவாக உள்ள 1302 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. பிறந்து 6 மாதங்கள் வரை கடுமையான எடை குறைவு உள்ள குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் இணைந்து ஊட்டச்சத்து பெட்டகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
முன்னதாக, ஊட்டச்சத்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா,
மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சுரண்டையில்: சுரண்டை நகராட்சி அங்கன்வாடி மையத்தில்,
ஊட்டச்சத்து உறுதி செய்த திட்டத்தை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தொடக்கி வைத்து, தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவ அலுவலா் ஜின்சு ரோஸ் மரியா தலைமை வகித்தாா். சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் த.ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா் பாலசுப்பிரமணியன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் சந்திரசேகர அருணகிரி, வெல்முத்து, காங்கிரஸ் மாநில பேச்சாளா் பால்துரை, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் இளம் தாய்மாா்கள் கலந்து கொண்டனா்.