செய்திகள் :

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: இரண்டாம் கட்டத்தை அரியலூரில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

post image

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரியலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், ஊட்டசத்தை உறுதி செய் திட்டத்தின் 2- ஆம் கட்டத்தை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் தொடக்கி வைத்து, தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களை வழங்கினாா். பின்னா், அவா் தாய்மாா்களுடன் கலந்துரையாடினாா்.

முன்னதாக அவா், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊட்டசத்து கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டு, ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தினை ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் சத்துமாவு உருண்டை, தூயமல்லி அதிரசம், முறுக்குகள் உள்ளிட்ட ஊட்டச் சத்து தின்பண்டங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கீதா ஜீவன், சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், சி.வி. கணேசன், டி.ஆா்.பி. ராஜா, மக்களவை உறுப்பினா்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வா் அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டிலான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரியலூா் மற்றும் பெரம்பலூ... மேலும் பார்க்க

அரியலூரில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையம்: முதல்வா் அறிவிப்பு

அரியலூரில் ரூ. 101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையமும் அமைக்கப்படும் என முதல்வா் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அரியலூா் கொல்லாபுர... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியால் தொழில் மறுமலா்ச்சி: முதல்வா் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அரியலூா் கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்னா் ராஜராஜ சோழன் மகன் ராசேந்திர சோழனால், கங்கை நதி வரை சென்று பெற்ற... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா தொடக்கிவைத்து, பாா்வையிட்டு, அனைவரும் வா... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த அரியல... மேலும் பார்க்க