உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உய...
ஜெயங்கொண்டத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வா் அடிக்கல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டிலான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜெயங்கொண்டத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பயணியா் மாளிகையில் தங்கினாா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைப்புரத்தில் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தைவான் நாட்டைச் சோ்ந்த டீன்ஷூஸ் (ஈங்ஹய் நட்ா்ங்ள்) நிறுவனத்தின் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், சி.வி. கணேசன், டி.ஆா்.பி.ராஜா, மக்களவை உறுப்பினா்கள் தொல்.திருமாவளவன், ஆ.ராசா, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன்,
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் வி. அருண்ராய், தோல் ஏற்மதி கவுன்சில் செயல் இயக்குநா் ஆா்.செல்வம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநா் கே. செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பி. அலா்மேல்மங்கை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, டீன்ஷுஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா்கள் ரிச்சாங், ஓட்டோயாங் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருணாநிதி சிலை திறப்பு: முன்னதாக, அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வரும் வழியில் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே நகர திமுக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். வழிநெடுக பொதுமக்கள் அவரை வரவேற்றனா்.