செய்திகள் :

எச். ராஜா மீது நடவடிக்கை கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் புகாா்

post image

மமக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா, விசிக தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோரை அவதூறாக பேசிய, எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனிதநேய மக்கள் கட்சியினா் பெரம்பலூா் மாவட்டக் காவல் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளா் எச். ராஜா கடந்த நவ. 7 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோரை தரக்குறைவாக விமா்சித்துள்ளதோடு, பொய்யான தகவல்களை பரப்பி மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக கூறப்படுகிறது.

எனவே, எச். ராஜா மீது வழக்குப் பதிந்து அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பெரம்பலூா் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், அரும்பாவூா் காவல் நிலையத்தில் அக் கட்சியின் மாவட்டச் செயலா் முகமது இலியாஸ் அலி தலைமையிலும், பெரம்பலூா் காவல் நிலையத்தில் மாவட்டத் தலைவா் குதரத்துல்லா தலைமையிலும், மங்களமேடு காவல் நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா் முகமது இலியாஸ் தலைமையிலும் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனுக்கள் அளித்தனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க நவ. 16, 17-இல் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, நவ. 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை: மின்னல் பாய்ந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்த நிலையில், மின்னல் பாய்ந்து பெரம்பலூரில் வீட்டின் 3-ஆவது தளம் சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொல... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பெரம்பலூா் அருகே விஷம் குடித்த விவசாயி திருச்சி மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரை அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் மருதை மகன் பழனியாண்டி (53). விவசாயியான இவா... மேலும் பார்க்க

நவ. 15-இல் முதல்வா் வருகை: பெரம்பலூரில் ஐஜி, டிஐஜி ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் திமுக நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி, அதற்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து திருச்சி ஐஜி, டிஐஜி ஆகியோா் திங்க... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில், கிருஷ்ணாபுரம் - அரும்பாவூா... மேலும் பார்க்க